தமிழக அரசு தொழில் பயிற்சி மையம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் இருந்து காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்:
மின்சாரப் பணியாளர் (Electrical staff)
காலியிடங்கள்:
மின்சாரப் பணியாளர் - 2
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள்
01.07.2020ம் தேதி கணக்கீட்டின்படி 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
அரசு
விதிகளின் படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்புகள்
இனச்சுழற்சி:
General Non Priority பிரிவிற்கு இப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால்
அனைத்து பிரிவினைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பதவிகளுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கீழ்காணும் ஏதேனும் ஒரு
படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எலக்ட்ரிகல்
இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பிரிவில்
பொறியியல் பட்டம் மற்றும் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்
பிரிவில் டிப்ளமோ பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
அல்லது
8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தில் எலெக்ட்ரிசியன்
பிரிவில் தேசிய தொழில் சான்றிதழ் பெற்று மூன்றாண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல்
வேண்டும்.
சம்பளம் :
பணிக்கு நியமனம் பெறுபவர்கள் ஊதியமாக
அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் பெறுவர்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை
தேவையான சான்றிதழ்களை இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க
வேண்டும்.
70 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாட்டில் சூப்பரான வேலைவாய்ப்புகள்
துணை இயக்குநர் / முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
தஞ்சாவூர் - 613 007
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி:
09.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS