Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு

 அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை – பட்டதாரிகளுக்கு செம வாய்ப்பு


தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

தகுதி வாய்ந்த பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையில் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலியிடங்கள் :

திருநெல்வேலி அரசு ஆதி திராவிடர் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணிக்கு என 01 பணியிடமும், இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1 காலியிடமும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


ஊதிய விவரம் :

இடைநிலை ஆசிரியர் - 8000/-

தமிழ் ஆசிரியர் - 9000/-


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்படி பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து 23.12.2020 அன்றுக்குள்

மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், திருநெல்வேலி -627001

என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION



CLICK HERE FOR MORE JOBS