Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசுப் பள்ளிகளில் 198 ஆசிரியர் காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

 தமிழக அரசுப் பள்ளிகளில் 198 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் தொகுப்பு ஊதியத்தில் நிரப்ப அரசு ஆணையிட்டுள்ளது.

பழங்குடியினர் நல மாநில இயக்குனர் வி.சி ராகுல் அவர்கள் தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


பதவிகளின் பெயர்:

இடைநிலை ஆசிரியர்

பட்டதாரி ஆசிரியர்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்

8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு


காலியிடங்கள்:

இடைநிலை ஆசிரியர் - 33

பட்டதாரி ஆசிரியர் - 117

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் - 48

மொத்தம் - 198


கல்வித்தகுதி:

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் பயிற்சி படித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், B.Ed., பட்டமும் பெற்றிருத்தல் வேண்டும்.

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும், B.Ed., பட்டமும் பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு

சம்பளம்:

இடைநிலை ஆசிரியர் - 8000

பட்டதாரி ஆசிரியர் - 9000

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் - 10000


தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு

நேர்முகத் தேர்வு

வகுப்பு நடத்துதல் தேர்வு

8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் நிரந்தர வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை:

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்டத் திட்ட அலுவலர் / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.12.2020



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS