தமிழகத்தில் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் வேலைவாய்ப்பு
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காலியாக
உள்ள பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
பயிர் அறுவடை சோதனை மேற்கொள்ள தகுதியான பணியாளர்கள் தேவைப்படுவதாக வேளாண் துறை
அலுவலகம் அறிவித்து உள்ளது.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் வேளாண் பாடப்பிரிவுகளில் மற்றும் அது சார்ந்த வேளாண்
பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி
இயக்கத்திறன் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு
அதிகபட்சம் ரூ.15,050/- வரை ஊதியம் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பிக்கும் நபர்கள் இதற்கான பணித் தேர்வு முகமை மூலமாக
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை
வேளாண்மை இணை இயக்குனர்,
சிவராமபுரம்,
தந்தை
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில்,
வேலூர் – 2
என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
19.12.2020
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS