தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தேர்வு முடிவுகள் வெளியீடு !
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உதவி எழுத்தர், மேற்பார்வையாளர், உதவியாளர்
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான தேர்வுகள்
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.
மேற்கண்ட பணியிடங்களுக்கான தேர்வு
முடிவுகள் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அந்தந்த
மாவட்டத்திற்கான தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தேர்வு தேதி:
தமிழ்நாடு மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம்-கூட்டுறவுத் துறையின் எழுத்து தேர்வானது
நவம்பர் 21, நவம்பர் 22 மற்றும் 28, நவம்பர் 29, 05, 2020 டிசம்பர் 06 ஆகிய
தேதிகளில் நடைபெற்றது.
தேர்வு முடிவுகள்:
மாவட்ட வாரியாக தமிழ்நாடு கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு
முடிவுகள் மற்றும் தேர்வானவர்களின் பெயர் படியல் தற்போது அதிகாரப்பூர்வமாக
வெளியாகி உள்ளன.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் பற்றிய
விவரங்கள் அனைத்தும் தேர்வு முடிவுகள் PDFயில் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கான Official
Website Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தின் பெயரை கிளிக்
செய்து முழுமையான தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
நேர்முகத்தேர்வு தேதி :
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக
நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு பற்றிய விபரங்கள் மற்றும் நேர்முகத் தேர்வு தேதி
விபரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான கூட்டுறவு வங்கியின் Website-ற்கு செல்ல இங்கு கிளிக்
செய்யவும்.