Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் ஆலோசகர் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் ஆலோசகர் வேலைவாய்ப்பு


தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு கூர்நோக்கு இல்லம் மற்றும் சிறப்பு இல்லங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர்:

ஆலோசகர் (ஆற்றுப்படுத்துநர்)


பணியிடம் :

சென்னை

கடலூர்

திருச்சி

சேலம்

கோவை

மதுரை

திருநெல்வேலி

ஆகிய 7 இடங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்கள்

சென்னை

செங்கல்பட்டு

ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு இல்லங்களில் 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசு ஆணையிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது திருச்சி மாவட்ட அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள 2 ஆலோசகர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

ஆண் பட்டதாரி – 01

பெண் பட்டதாரி – 01


கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்துக்கு செலவு உட்பட ரூ.1000/- ஊதியமாக வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


நன்னடத்தை அலுவலர்,

அரசினர் கூர்நோக்கு இல்லம்,

34, கீழரண் சாலை,

திருச்சிராப்பள்ளி – 620 002


விண்ணப்பிக்க கடைசி தேதி:

08.01.2021



IMPORTANT LINKS:


DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS