Ticker

6/recent/ticker-posts

மீண்டும் பல மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து..!

ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து..!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இப்பதவிகளுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட வாரியாக தற்போது பெறப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே நான்கு மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் நான்கு மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




பதவியின் பெயர்:

இளநிலை வரைதொழில் அலுவலர் / பணிப்பார்வையாளர்


காலியிடங்கள்:

777 (அனைத்து மாவட்டத்திலும் சேர்த்து)


தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள காலியிடங்கள்:

 
221( 8 மாவட்டங்கள்)


மீதமுள்ள காலிப்பணியிடங்கள்:


556

தற்போது வரை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள மாவட்டங்கள்:

 
வேலூர் - 16

ராணிப்பேட்டை - 19

திண்டுக்கல் - 26

சேலம் - 53

திருநெல்வேலி - 4

திருவண்ணாமலை - 80

தென்காசி - 15

காஞ்சிபுரம் - 8

இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கையானது நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் இதே பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு தனியே வெளியிடப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


DOWNLOAD CANCELLATION NOTIFICATION


DINDIGUL


SALEM


VELLORE


RANIPET


TIRUNELVELI


KANCHEEPURAM


THIRUVANNAMALAI

TENKASI


CLICK HERE FOR MORE JOBS