Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு அரசு  ஆதி திராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021


தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :

பணிப்பார்வையாளர் (Overseer) பதவிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

01.07.2020 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள்விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



பிற தகுதிகள் :

சென்னை மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.




தேர்வு செய்யும் முறை :

Short Listing மற்றும் Interview மூலம் இப்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.




விண்ணப்பிக்கும் முறை :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து அதே அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :


07.01.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS