Ticker

6/recent/ticker-posts

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை

 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை


கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட தகுதி வாய்ந்த பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்களிடம் இருந்து பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




காலிப்பணியிடங்கள் :

இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு) – 01

Lab Technician – 05



கல்வித்தகுதி :

இளநிலை செயற்பணியாளர்:

ஏதாவது ஒரு துறையில் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

Typewriting Higher Grade in English & Lower grade in Tamil.


டெக்னீசியன் :

10 ஆம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் 2 ஆண்டு லேப் டெக்னீசியன் டிப்ளமா பெற்றிருக்க வேண்டும்.



தேர்வு செய்யும் முறை :


இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு) – எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

டெக்னீசியன்(ஆய்வகம்) – கல்வித்தகுதி மற்றும் நேர்காணல்



சம்பளம்:

இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு) – ரூ.19,500-62,000/-

டெக்னீசியன்(ஆய்வகம்) – ரூ.19,500-62,000/-


விண்ணப்பக் கட்டணம் :

OC/BC/MBC/DNC பிரிவு வகுப்புகளை சேர்ந்த விண்ணப்பதாரர்ர்கள் விண்ணப்ப செயலாக்க கட்டணமாக ரூ.250/- (திரும்ப செலுத்தாதது) செலுத்த வேண்டும்.

SC/SCA/ST பிரிவு வகுப்புகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப செயலாக்க கட்டணமாக ரூ.100- (திரும்ப செலுத்தாதது) செலுத்த வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான விபரங்கள் மற்றும் எழுத்துத்தேர்வு விபரங்கள் விண்ணப்பப் படிவத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறிப்பு:

தற்போது கோயமுத்தூர் ஒன்றியத்தின் எல்லையில் கீழ் உள்ள பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு விரைவு அஞ்சலிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.


“பொது மேலாளர்,

கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்,

பச்சாபாளையம்,

காளம்பாளையம்(அஞ்சல்),

கோவை-641 010”


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS