Ticker

6/recent/ticker-posts

கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் வந்தாச்சு..!


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வாரியாக கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு வாயிலாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டு கொரோனா தொற்று காரணமாக பலமுறை நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை மீண்டும் அனுப்பப்பட்டு வருகின்றது.


நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் ஊராட்சி ஒன்றியங்கள் வாயிலாக அந்தந்த விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.





நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம் பற்றிய முழுமையான விபரங்கள் அழைப்புக் கடிததத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட வாரியாக நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மாறுபடும்.



நேர்முகத் தேர்வின் பொது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் :

நிலையான முகவரிக்கான அசல் சான்று (குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருவாய்த்துறை மூலம் பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்கள்)

சாதிச்சான்றிதழ் அசல்.

பிறந்த தேதிக்கான அசல் சான்றிதழ் (பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள்)

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை


கல்வித் தகுதிக்கான (10-ஆம் வகுப்பு தேர்ச்சி) அசல் சான்றிதழ்

இதர முன்னுரிமை குறித்த உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழ்.




குறிப்பு :


விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும் அழைப்பாணையை நேர்காணலின் போது எடுத்துச் செல்ல வேண்டும்.

அசல் ஆவணங்கள் மட்டுமே நேர்காணலின் போது சரிபார்க்கப்படும்.

நகல் ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. நிராகரிக்கப்படும்.

நேர்காணலுக்கு பயணப்படி மற்றும் இதர படிகள் வழங்கப்படாது.