Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு

  தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் :

ஓதுவார் - 1

பரிசாரகர் -  2

உப கோயில் அர்ச்சகர் -1

வேத பாராயணம் - 1

கல்வித்தகுதி :

ஓதுவார்

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சைவ ஆகம முறைகள் பற்றி தெரிந்திருத்தல் வேண்டும்.

தேவாரப் பாடசாலை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேத பாடசாலையில் இருந்து ஆகம சான்று பெற்றிருக்க வேண்டும்.

பரிசாரகர்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

திருக்கோயில் சைவ ஆகம முறைப்படி பிரசாதங்கள் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

உப கோயில் அர்ச்சகர்

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சைவ ஆகம முறைகள் பற்றி தெரிந்திருத்தல் வேண்டும்.

தேவாரப் பாடசாலை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேத பாடசாலையில் இருந்து ஆகம சான்று பெற்றிருக்க வேண்டும்.

வேத பாராயணம்

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சைவ ஆகம முறைகள் பற்றி தெரிந்திருத்தல் வேண்டும்.

தேவாரப் பாடசாலை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேத பாடசாலையில் இருந்து ஆகம சான்று பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

ஓதுவார் - 18,500/- + படிகள்

பரிசாரகர் -  15,900/-+  படிகள்

உப கோயில் அர்ச்சகர் - 11,600/- + படிகள்

வேத பாராயணம் -  15,900/-+ படிகள்

வயது வரம்பு :

குறைந்தபட்சம் - 18 வயது

அதிகபட்சம் - 35 வயது

தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருக்கோவில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

துணை ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,

திருப்பரங்குன்றம்,

மதுரை - 625 005

விண்ணப்பிக்க கடைசி தேதி :

06.02.2021

CLICK HERE FOR MORE JOBS