Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு டவுண் பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு அரசு டவுண் பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள்:

துப்புரவு பணியாளர் பதவிக்கு இனச் சுழற்சி முறை அடிப்படையில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன .



வயது வரம்பு:

01.01.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி:


தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருக்காட்டுப்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சியில் 10 கி.மீ சுற்றளவில் நிலையான முகவரியில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள் 11.01.2021.



விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது அனைத்து விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன்


குடும்ப அட்டை நகல்,

வேலைவாய்ப்பு பதிவு அட்டை,

இருப்பிட சான்றிதழ் நகல்,

சாதிச் சான்றிதழ் நகல்,

முன் அனுபவ சான்றிதழ்

இதர சான்றிதழ்களுடன் பதிவஞ்சலில் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

செயல் அலுவலர்,

தேர்வு நிலைப் பேரூராட்சி,

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சாவூர் மாவட்டம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

08.01.2021



IMPORTANT LINKS




DOWNLOAD NOTIFICATION




CLICK HERE FOR MORE JOBS