ஆவின் கூட்டுறவுத் துறையில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவுத் துறையின் மூலமாக மாவட்ட வாரியாக
காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
அதன்
தொடர்ச்சியாக தற்போது மதுரை மாவட்ட ஆவின் கூட்டுறவுத்துறையில் காலியாக
உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு நேரடியான நேர்காணல் நடைபெற
உள்ளதால் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்
நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பதவிக்கு 5 பணியிடங்கள் காலியாக
உள்ளன.
வயது வரம்பு:
31.01.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்தில் B.V.Sc முடித்திருக்க வேண்டும்.
இரு சக்கர வாகனம்
அல்லது நான்கு சக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
மாதச்சம்பளம்:
அடிப்படைச் சம்பளமாக ரூ.30,000/- மற்றும் பிற படிகளுடன் சேர்த்து மாதச்
சம்பளமாக மொத்தம் ரூ.43,000/- வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது
01.03.2021 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தங்களது 2
புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 01.03.2021 அன்று
நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION