10-ஆம் வகுப்பு தகுதிக்கு 13206 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய இளைஞர் விளையாட்டு அமைச்சகத்திற்கு உட்பட்டு
இயங்கக்கூடிய Nehru Yuva Kendra Sangathan (NYKS) -இல் காலியாக உள்ள
13206 Volunteer பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :
National Youth Volunteer பணிகளுக்கு என 13206 பணியிடங்கள் காலியாக உள்ளதாக
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.04.2021 அன்று கணக்கீட்டின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 29 வயது
வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க
முடியும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.5,000/- வரை சம்பளம்
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, கணிணி பயன்பாட்டில் பெற்றுள்ள அடிப்படை அறிவு
இவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைனில்
விண்ணப்பித்து கொள்ளலாம்.
அல்லது கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களின் நகல்கலை இணைத்து
சம்பந்தபட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION & APPLICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS