10-ஆம் வகுப்பு தகுதிக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்தில்
காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பதவிகள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும்
உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள 29 கிராமங்களில் கிராம
உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.
அதிகபட்சமாக
பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள்,
தாழ்த்தப்பட்ட
வகுப்பினருக்கு 35 ஆண்டுகள்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி
ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
தமிழில் எழுதப் படிக்கத்
தெரிந்திருக்க வேண்டும்.
பணியின் தன்மை :
நிரந்தரப் பணியிடம்
சம்பளம் :
11,100/- முதல் 35,100/- மற்றும் இதர படிகள்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தைப் பூர்த்தி செய்து கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி
குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
நன்னிலம் -
610 105
விண்ணப்பிக்க கடைசி தேதி:
22.02.2021
IMPORTANT LINKS
CLICK HERE FOR MORE JOBS
DOWNLOAD NOTIFICATION