தமிழ்நாட்டில் மாவட்ட நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றங்களில்
தன்னார்வ தொண்டர்களாக சேவை புரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான
தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
சேலம் - 50
சென்னை - 50
கரூர் - 50
வேலூர் - 50
திருவண்ணாமலை - 50
கிருஷ்ணகிரி - 50
திருநெல்வேலி - 50
அரியலூர் - 50
ஈரோடு - 50
கன்னியாகுமரி - 50
வயது வரம்பு:
18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
தகுதிகள் :
குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரைவில் புரிந்துணரும் திறன் உடையவராக இருக்க வேண்டும்.
அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் (ஓய்வு பெற்றவர்கள் உட்பட), ஓய்வு
பெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள்,மருத்துவர்கள் பயிலும் மாணவர்கள்,
அங்கன்வாடி பணியாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் போன்றோர் இப்பணிக்கு
விண்ணப்பிக்கலாம்.
மதிப்பூதியம்:
பணிபுரியும் முழு நாள் ஒன்றுக்கு ரூபாய் ரூ.500/- மதிப்பூதியமாக
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் தேதி மற்றும் இடம் விண்ணப்பதாரருக்கு அழைப்பு மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ
தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்டத்திற்கான விண்ணப்பப்
படிவத்தை பதிவிறக்கம் செய்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
IMPORTANT LINKS
TIRUNELVELI - NOTIFICATION & APPLICATION
ARIYALUR - NOTIFICATION & APPLICATION
ERODE - NOTIFICATION & APPLICATION
KANNIYAKUMARI - NOTIFICATION & APPLICATION
SALEM NOTIFICATION & APPLICATION
CHENNAI NOTIFICATION & APPLICATION
KARUR NOTIFICATION & APPLICATION
VELLORE NOTIFICATION & APPLICATION