இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சிவகங்கை மாவட்டத்தில்
அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவில், அருள்மிகு அடைக்கலம் காத்த
அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:
டிரைவர் -1
ஜாடுமாலி - 1
தோட்டி - 1
உபகோவில் அர்ச்சகர்- 1
ஒதுவார் - 1
காவல் - 1
குழுக்கோவில் காவல் - 1
கல்வித்தகுதி:
டிரைவர் – 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க
வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஜாடுமாலி, தோட்டி,
காவல், குழுகோவில் காவல் – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால்
போதுமானது.
உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் – நன்றாக தமிழ் எழுதவும்
படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2020 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக
இருத்தல் வேண்டும்.
இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
டிரைவர் - 15,300/- + படிகள்
ஜாடுமாலி
- 6900/- + படிகள்
தோட்டி - 6900/-+ படிகள்
உபகோவில்
அர்ச்சகர்- 11,600/- + படிகள்
ஒதுவார் - 18,500/- + படிகள்
காவல்
- 157,00/- படிகள்
குழுக்கோவில் காவல் - 3600/- + படிகள்
விண்ணப்பப் படிவம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் திருக்கோவில்
அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பப் படிவத்தை நேரில் பெற்றுக்கொள்ள
வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான விண்ணப்பப் படிவம் அனுப்ப
வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் திருக்கோயில்
அலுவலகத்தில் நேரில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து
பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார்
காளியம்மன் கோவில்,
அரியாகுறிச்சி,
காளையார் கோவில்
வட்டம்,
சிவகங்கை மாவட்டம் – 630 556 .
அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன்
திருக்கோயில் முகவரி :
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு அடைக்கலம்
காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில்,
மடப்புரம்,
திருப்புவனம்
வட்டம்,
சிவகங்கை மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
அருள்மிகு வெட்டுடையார்
காளியம்மன் திருக்கோவில் :
12.03.2021
அருள்மிகு
அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில் :
09.03.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS