Ticker

6/recent/ticker-posts

தேசிய வெப்ப மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 230 பணியிடங்கள்

தேசிய வெப்ப மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 230 பணியிடங்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய வெப்ப மின் நிறுவனத்தில் (NTPC) காலியாக உள்ள பல்வேறு பணிய்டங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Assistant Engineer மற்றும் Assistant Chemist ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Assistant Engineer – 200 காலியிடங்கள்

Assistant Chemist – 30 காலியிடங்கள்


மொத்தமாக 230 காலிப்பணியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.



கல்வித்தகுதி :


Assistant Engineer – அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் Electrical/ Mechanical/ Electronics/ Instrumentation பாடங்கள் மற்றும் அது சார்ந்த பிரிவுகளில் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Chemist – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இருந்து முதுகலை வேதியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம் :

ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- மற்றும் பிற படிகள்



தேர்வு செய்யும் முறை :


தகுதியான நபர்கள் ஆன்லைன் வாயிலான எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்வையிடலாம்.



விண்ணப்பக் கட்டணம் :


General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

SC/ ST/ PwBD/ ESM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

10.03.2021

 

IMPORTANT LINKS

 
DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE

 
CLICK HERE FOR MORE JOBS