Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் வேலைவாய்ப்பு


தமிழகத்தில்‌ ஏப்‌ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்‌ நடக்கிறது. இதற்‌கான அறிவிப்பை கடந்த மாதம்‌ 26ம்‌ தேதி இந்திய தேர்தல்‌ ஆணையம்‌ வெளியிட்டது. இதனால்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ தேர்தல்‌ நடத்தும்‌ பணிகள்‌ தீவிரப்படுத்தப்‌பட்டுள்ளன. வருவாய்‌ துறை அலுவலர்கள்‌ அனைவரும்‌ சட்டமன்ற தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌.

இந்நிலையில்‌ காலி பணியிடம்‌, பணியாளர்கள்‌ பற்றாக்குறை போன்றவற்றால்‌ தேர்தல்‌ பணிகளில்‌ தாமதம்‌ ஏற்பட வாய்ப்‌புள்ளது. எனவே தேர்தல்‌ பணிச்சுமையை சமாளிக்க தேர்தல்‌ ஆணையம்‌ அனுமதி அளித்துள்ள எண்ணிக்கையில்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ தற்காலிகமாக இளநிலை உதவியாளர்கள்‌, டைப்பிஸ்டுகள்‌, பதிவறை எழுத்தர்கள்‌, அலுவலக உதவியாளர்கள்‌ போன்ற பணியிடங்களை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்களான கலெக்டர்கள்‌ நிரப்பிக்‌ கொள்ள தேர்தல்‌ ஆணையம்‌ அதிகாரம்‌ வழங்கியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.




பதவிகளின் பெயர் :

இளநிலை உதவியாளர்

டைப்பிஸ்ட்

பதிவறை எழுத்தர்

அலுவலக உதவியாளர்


காலியிடங்கள் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வேறுபடும்.


கல்வித்தகுதி :

இளநிலை உதவியாளர் - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

டைப்பிஸ்ட் - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

பதிவறை எழுத்தர் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி


சம்பளம் :

இளநிலை உதவியாளர் - ரூ.14,640/-

டைப்பிஸ்ட் - ரூ.14,640/-

பதிவறை எழுத்தர் - ரூ.9664/-

அலுவலக உதவியாளர் - ரூ.9664/-


விண்ணப்பக் கட்டணம் :

கிடையாது


தேர்வு செய்யும் முறை :

நேரடி நியமனம்


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS