Ticker

6/recent/ticker-posts

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழக கோவில்களில் வேலைவாய்ப்பு

 தமிழ்  எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழக கோவில்களில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிக் கொள்ள தகுதியானவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து இப்பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலிப்பணியிடங்கள் :

அர்ச்சகர்

ஓதுவார்

நாதஸ்வரம்

தவில்

மடப்பள்ளி

தோட்டக்காரர்

உதவி மின்பணி

தமிழ் புலவர்

கால்நடை பராமரிப்பாளர்

உட்பட பல்வேறு பணிகளுக்கு மூன்று கோவில்களையும் சேர்த்து 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது



வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி :

அர்ச்சகர், ஓதுவார் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத/ தேவார பாடசாலையில் தேர்ச்சி.

நாதஸ்வரம், தவில் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. அறநிறுவனங்கள் அல்லது அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் தேர்ச்சி.

மடப்பள்ளி – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

தோட்டக்காரர் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

தோட்டக்கலையில் அனுபவம் இருக்க வேண்டும்.

உதவி மின்பணி – அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையத்தில் எலக்ட்ரிகல் தேர்ச்சி.

கால்நடை பராமரிப்பாளர் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. கால்நடை பராமரிப்பில் அனுபவம் இருக்க வேண்டும்.

தமிழ் புலவர் – தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.


சம்பளம் :

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பப் படிவத்தைப் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி :

10.03.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS