தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் காலியாக உள்ள உதவியாளர்
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Personal Assistant எனப்படும் தனி உதவியாளர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள்
காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் அரசுப்பணியில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் கிரேடு- II பதவியில்
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கமான பதவியை பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
ரூ.36400-115700/- வரை ஊதியம் வழங்கப்பட
உள்ளது.
தேர்வு செய்யும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை
பூர்த்தி செய்து 30.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IMPORTANT LINKS