Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் 10-ஆம் வகுப்பு தகுதிக்கு Data Entry Operator வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு அரசில் 10-ஆம் வகுப்பு தகுதிக்கு Data Entry Operator வேலைவாய்ப்பு


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படும் இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



பணியிடங்கள் :


உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்


வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.



கல்வித்தகுதி :


விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களின் முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் - II

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

தேனி - 625 531


விண்ணப்பிக்க கடைசி தேதி :

31.05.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION



FOR MORE JOBS CLICK HERE