தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு
கால ஒப்பந்த அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Lab Technician, X-Ray Technician ஆகிய பணிகளுக்கு 150 காலிப்பணியிடங்கள்
உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Lab Technician – 100 பணியிடங்கள்
X-Ray Technician – 50
பணியிடங்கள்
கல்வித்தகுதி :
Lab Technician – +2 தேர்ச்சி
பெற்று இரண்டு ஆண்டுகளுக்கான Diploma in Lab Technology course படித்திருக்க
வேண்டும்.
X-Ray Technician – அரசு
அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் X Ray Technician படித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
Lab Technician
– 15,000
X-Ray Technician
– 20,000
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள்
தங்களின் அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் சென்று நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
நேர்காணல் ஆனது வரும் 06.05.2021
மற்றும் 07.05.2021 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
உறுப்பினர் செயலர் / மாநகர நல அலுவலர்,
சென்னை மாநகர நல சங்கம்,
பொது
சுகாதாரத் துறை,
பெருநகர சென்னை மாநகராட்சி,
ரிப்பன்
மாளிகை,
சென்னை - 3
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS