Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) வேலைவாய்ப்பு

   தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) வேலைவாய்ப்பு


தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழக அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) நாமக்கல் பிரிவில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.





பணியிடங்கள் :

Wireman - 30

Electrician - 30

மொத்தம் 60 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
 
மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்வையிடவும்



சம்பள விபரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6000/- முதல் அதிகபட்சம் ரூ.8000/- வரை ஊதியம் வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



IMPORTANT LINKS


WIREMAN - APPLY LINK


ELECTRICIAN - APPLY LINK


CLICK HERE FOR MORE JOBS