தமிழ்நாடு அரசு ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில்
உள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்படவுள்ளனர்.
இதற்கு தகுதியும் திறமையும் உள்ள
விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில்
தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக
உள்ளன.
வயது வரம்பு :
31/08/2021 தேதியின்படி
அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நன்றாக எழுத படிக்க மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாக இருத்தல்
வேண்டும்.
கணினிதிறன் உடையவர்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படும்.
கைபேசி வைத்திருப்பவர்களாகவும், அதை இயக்கி
குறுந்தகவல் அனுப்பவும் & பெறவும் திறனுடையவர்களாகவும் இருத்தல்
அவசியம்.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினராக
இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் அதே
தொகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம்.
மக்கள் நிலை ஆய்வால்
கண்டறியப்பட்ட உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
நல்ல தகவல்
தொடர்புதிறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
கிராமத்திலிருந்து அருகாமையிலுள்ள வங்கிகளுக்குச் செல்ல விருப்பம்
உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
நீண்ட காலகடன் நிலுவை உள்ளவராக
இருத்தல் கூடாது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்காணும் தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை தாங்கள் சார்ந்துள்ள
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக அஞ்சல் மூலம் அனுப்பலாம். இந்த பணிக்கு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
அறை எண்.212, மாவட்ட இயக்க
மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,
கரூர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
31.08.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS