Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

 தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு


தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னையின் திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

இளநிலை உதவியாளர் - 1

ஓட்டுநர் - 1

கடைநிலை ஊழியர் - 4

உதவி மின்பணி - 1

அம்மன் மடப்பள்ளி - 1

பரிச்சாரகர் - 1

பெருமாள் கோவில் மடப்பள்ளி - 2

ஒத்து - 1

தாளம் - 1

டமாரம் - 1

திருச்சின்னம் - 1

முடி கொட்டகை மேஸ்திரி - 1

குழாய் பராமரிப்பாளர் - 1

தமிழ்ப்புலவர் - 1

அர்ச்சகர் - 1

ஓதுவார் - 1

பரிச்சாரகர் - 1

அர்ச்சகர் - 1

இரவுக்காவலர் - 1


வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


கல்வித்தகுதி :

இளநிலை உதவியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி, அல்லது அதற்கு மேல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்

டிரைவர் – 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருங்க வேண்டும்.

ஜாடுமாலி, தோட்டி, முடிகொட்டகை மேஸ்திரி, இரவு காவலர் – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குழாய் பராமரிப்பாளர் – ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஒத்து & தாளம் – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளியில் தேர்ச்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.



சம்பளம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பப்படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்,

திருவேற்காடு,

சென்னை - 600 077


விண்ணப்பிக்க கடைசி தேதி :

22.10.2021


IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS