தமிழக அரசு சத்துணவுத் துறையில் புதிய வேலைவாய்ப்பு
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் புதுக்கோட்டை
மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
கணினி உதவியாளர் பணிக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை
தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் :
கணினியில் M.S.Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து பிரிவினருக்கும்
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
சம்பளம் :
கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12,000/- வரை மாத சம்பளமாக
வழங்கப்படும்.
நிபந்தனைகள் :
இப்பணியிடம் பகுதி நேர அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது.
பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு
உரிய பணி தொடராணை பெறப்பட்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும். ஒவ்வொரு
ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு வார கால இடைவெளி விட்டு பணியிடம்
புதுப்பிக்கப்படும்.
எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம்
செய்ய கோரவோ இயலாது. இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி
ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயர்/ தாய், தந்தை பெயர்/ தேசிய இனம்,
வகுப்பு/ பிறந்த தேதி இருப்பிட முழு முகவரி, தொலைபேசி எனளர்,/ கைபேசி என்,
கல்வித் தகுதி, தொழில்நுட்ப /கணினி தகுதி/ முன் அனுபவம் ஆகியவற்றினை முழு
வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து கையொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன்
கல்லூரி மாற்று சான்று, பட்டம் பெற்றதற்கான மதிப்பெண் சான்று, தட்டச்சில்
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றதற்கான சான்று, முன்
அனுபவ சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின்
நகல்கள் Gazetted Officer-ன் மேலொப்பம் பெற்று பின்வரும் முகவரிக்கு
அனுப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர்,
சத்துணவு திட்டப்பிரிவு,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
புதுக்கோட்டை.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
16.11.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS