Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு / கிராமிய அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு முகவர்‌ பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு / கிராமிய அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு முகவர்‌ பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி: 

10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மற்ற ஆயுள் காப்பீட்டு நிறுனங்களில் முகவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


நேர்காணல் பற்றிய விவரங்கள் :

விண்ணப்பதாரர்கள்‌ தங்களின்‌ கல்வித்தகுதி/வயதுத்தகுதி, இருப்பிடச்சான்று / ஆதார்‌ எண்‌, Pan Card இவற்றிற்கான அசல்‌ மற்றும்‌ நகல்‌ சான்றிதழ்களுடன்‌ 4 பாஸ்போர்ட்‌ அளவு புகைப்படத்துடன்‌ நேர்முகத்தேர்வில்‌ கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு முகவர்களை தேர்வு செய்யும்‌ பொருட்டு நேரடி முகவர்‌ தேர்வு ஸ்ரீரங்கம்‌ கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர்‌ அலுவலகத்தில்‌ (சாத்தார வீதி, ஸ்ரீரங்கம்‌) 10.11.2021 அன்று காலை 11 மணியளவில்‌ நடைபெற உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்‌ ஸ்ரீரங்கம்‌, முசிறி, துறையூர்‌ மற்றும்‌ பெரம்பலூர்‌ பகுதிக்குட்பட்ட இடங்களில்‌ முகவர்‌ பணியை மேற்கொள்ள வேண்டும்‌.

முக்கிய குறிப்பு :

தேர்வு செய்யப்பட்டவர்கள்‌ பாதுகாப்பு வைப்பு கட்டணமாக ரூ.5000/- அவர்கள்‌ பெயரில்‌ தேசிய சேமிப்பு பத்திரமாகவோ அல்லது கிசான்‌ விகாஸ்‌ பத்திரமாகவோ எடுக்க வேண்டும்‌. மேலும்‌ உரிமம்‌ கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும்‌.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியம் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்துடன் அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் 10.11.2021 அன்று காலை 11 மணியளவில்‌ நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.



IMPORTANT LINKS


  DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS