Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு - 600 காலியிடங்கள்

 தமிழக அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

 

தமிழக அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள Sagar Mitra பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.





காலிப்பணியிடங்கள்:

Sagar Mitra பதவிக்கு 600 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள் உள்ள கிராமங்களின் பெயர்ப் பட்டியல் கீழே அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.



வயது வரம்பு:

01.07.2021 அன்றைய தேதிப்படி அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.



கல்வித் தகுதி:

மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

தமிழில் நன்றாக பேசும், எழுதும், படிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.



பணியிடம் :

தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்ட கிராமங்கள்


தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் அந்தந்த கிராமத்திலோ அல்லது அருகிலுள்ள கிராமத்திலோ வசிப்பவராக இருக்க வேண்டும்.

தகுதிகள் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.



மாதச் சம்பளம்:

Sagar Mitra – ரூ.10,000/- + Incentive Rs.5000/-



விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அந்தந்த மாவட்ட மீன்வளத் துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.



Assistant Director of Fisheries,

_____________ (உங்கள் மாவட்டத்தின் பெயர்)

அனைத்து மாவட்டத்திற்குமான முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.




விண்ணப்பிக்க கடைசி தேதி :

12.01.2022



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS