தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின்
காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பதவிகள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும்
உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
அலுவலக உதவியாளர் - 12 காலியிடங்கள்
காலிப்பணியிடங்கள் :
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
வயது 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /
சீர்மரபினருக்கு 34 ஆண்டுகள்,
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.
வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கபட்டிருக்க
வேண்டும்.
அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இனச்சுழற்சி :
ஒவ்வொரு பதவிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இனத்தைச் சார்ந்த
விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது,
சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திற்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
22.12.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS