Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

 தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 37 காலியிடங்கள்


தமிழ்நாட்டில் சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி (CSIR) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :


Sr Project Associate - 4

Project Associate I / II - 19


Project Assistant - 8

Scientific Administrative Assistant - 6

மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வயது வரம்பு :


அதிகபட்ச வயது வரம்பானது பதவிகளுக்கு ஏற்றவாறு 35 முதல் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் B.Tech/ MSc/ BE/ Graduate Degree/ BCom/ BSc/ BCA/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


சம்பளம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பதவிகளுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்காணலுக்கு வரும்போது விண்ணப்பப் படிவத்தின் Print out மற்றும் அனைத்து வகையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து
கொள்ள வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

21.01.2022




IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS