Ticker

6/recent/ticker-posts

இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு

 

   இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை


எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





காலிப்பணியிடங்கள் :

Project Engineer பணிகளுக்கு மொத்தமாக 12 காலியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு :

31.01.2022 அன்றுள்ள படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 33 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.


கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ECE / EEE / ETE / Mech / CSE போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



சம்பளம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு

முதலாமாண்டு ரூ.40,000/-

இரண்டாமாண்டு ரூ.45,000/-

மூன்றாம் ஆண்டு ரூ.50,000/-

நான்கு ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை ரூ.55,000/-

வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Document verification மற்றும் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி :

15.02.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS