CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
சென்னையில் அமைந்துள்ள மேம்பட்ட கணிணி மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய
குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை
முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Project Officer – 3
Project Engineer – 9
Project Associate – 11
Project Manager – 2
Project Technician – 4
Project Support Staff – 6
Project Lead – 2
மொத்தமாக 37 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Project Support Staff பணிக்கு 28 வயது,
Project Officer, Project Associate மற்றும் Project Technician பணிக்கு 30 வயது,
Project Engineer மற்றும் Project Lead பணிக்கு 35 வயது,
Project Manager பணிக்கு 50 வயது, என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma / CA / LLM / CS / MBA / BE / B.Tech / ME / M.Tech / Ph.D அல்லது பணிக்கு தொடர்புடைய ஏதேனும் Graduation / Post Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
அனுபவம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Written Exam & Interview அடிப்படையில் தான் தேர்வு
செய்யப்படுவார்கள்.
சம்பளம் :
ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதிக்கேற்ற சம்பளம் மற்றும் பிற படிகளும்
வழங்கப்படும்.
பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.13,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை அளிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை :
hrd-sil@cdac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.03.2022