தமிழ்நாடு அரசு VAO ஆபீசில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக
அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் அமைந்துள்ள 5 கிராமங்களில் கிராம உதவியாளர்
பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1. வீரலப்பட்டி – மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சீர்மரபினர் (ஆண், மற்றும் பெண்)(முன்னுரிமையற்றவர்கள்) MBC & DNC (General) (Non Priority)
2. கேதையுறம்பு- முஸ்லீம் அல்லாத பிற்படுத்தப்பட்டோர்(ஆண் மற்றும் பெண் )(முன்னுரிமையற்றவர்கள்) (இட ஒதுக்கீடு முன்னாள் இராணுவத்தினர்)
BC(Other than BackWard Class Muslims) (General) (Non Priority)
(Reservation Ex serviceman)Tamil Medium
3.பொருர் – பொதுப்பிரிவினர் (பெண்கள் மட்டும்) (முன்னுரிமையற்றவர்கள்) GT (Women) (Non Priority)
4. மண்டவாடி – பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லீம் (பெண்கள் மட்டும்)(முன்னுரிமையற்றவர்கள்) (இட ஒதுக்கீடு ஆதரவற்ற விதவை) B.C.Muslims (Women)
(Non Priority) (Reservation Destitute Widow)
5. கூத்தம்பூண்டி – பொதுப்பிரிவினர்(ஆண் மற்றும் பெண்) (முன்னுரிமையற்றவர்கள் GT (General) (Non Priority)
வயது வரம்பு:
வயது 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,
பிற வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க
வேண்டும்.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
11,100/- முதல் 35,100/- மற்றும் இதர படிகள்
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வின்
மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தைப் பூர்த்தி செய்து கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி
குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
ஒட்டன்சத்திரம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.04.2022
IMPORTANT LINKS
CLICK HERE FOR MORE JOBS