10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப
தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்:
Chennai City Region – 6 பணியிடங்கள்
Central Region – 9 பணியிடங்கள்
MMS Chennai – 25 பணியிடங்கள்
Southern Region – 3 பணியிடங்கள்
Western Region – 15 பணியிடங்கள்
என மொத்தம் 58 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தளர்வு :
OBC - 5 ஆண்டுகள்
SC / ST - 3 ஆண்டுகள் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம்
3 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
19,900/- மற்றும் பிற படிகள்
விண்ணப்பக் கட்டணம் :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் Driving Test சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Senior Manager (JAG),
Mail Motor Services,
No.37, Greams road,
Chennai - 6
விண்ணப்பிக்க கடைசி தேதி :
31.03.2023
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS
DOWNLOAD APPLICATION